கொழும்பு- ஜெம்பட்டா வீதி துப்பாக்கிச் சூடு

கொழும்பு- ஜெம்பட்டா வீதி கரையோரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதன் போது காயமடைந்த 27 வயதுடைய நபர் கொழும்ப தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கரையோரப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *