ஹாலிவுட் நடிகர் ரசல், நடிகை ஹாக்னரை மணக்கிறார்

ஹாலிவுட் நடிகர் ரசல் (வயது32). இவர் ஐஸ் ஹாக்கி வீரராக இருந்து, ஹாலிவுட் பட உலகில் நுழைந்தவர். நெதர்லாந்தில் ஐஸ் ஹாக்கி விளையாட சென்ற இடத்தில் சான் ஹாமர்ஸ் என்ற பெண்ணை காதலித்து மணந்தார்.

ஹாலிவுட் நடிகர் ரசல், நடிகை ஹாக்னரை மணக்கிறார்

பின்னர் அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் அவர், 2016-ம் ஆண்டு ‘போக் ஹீரோ அண்ட் பன்னி கய்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில், நடிகை மெரிடித் காத்லீன் ஹாக்னரை (31) சந்தித்தார். இருவரிடையே நட்பு மலர்ந்தது. பின்னர் அது காதலாக கனிந்தது. இந்தக் காதல் இப்போது திருமணத்தில் முடிகிறது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து விட்டனர். இதற்கான நிச்சயதார்த்தம் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது நடந்துள்ளது.

இதை நடிகை ஹாக்னர், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

இந்த ஜோடியினர் கலிபோர்னியா மாகாணத்தில் ஷெர்மான் ஓக்ஸ் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சொகுசு வீடு வாங்கி உள்ளனர்.

நடிகை ஹாக்னர், “ரசல், உலகின் தலைசிறந்த ஆண்” என உருகுகிறார். ரசல், “ என் காதலி ஹாக்னர் ஒரு அற்புதமான நடிகை” என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *