யாழ் வட்டுக்கோட்டையில் தனித்திருந்த வயோதிபத் தம்பதிகளிடம் கொள்ளை

யாழ் செய்திகள்:வீட்டில் தனித்திருந்த வயோதிபத் தம்பதியை அச்சுறுத்தி நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் அராலி தெற்கு வட்டுக்கோட்டை உடையார்கட்டுப் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

யாழ் வட்டுக்கோட்டையில் தனித்திருந்த வயோதிபத் தம்பதிகளிடம் கொள்ளை

அதிகாலை 2 மணியளவில் வீட்டுக் கூரையைப் பிரித்து உள் நுழைந்த முகமூடி அணிந்த இருவர் வீட்டில் தனித்திருந்த 62 வயதுடைய கணவன், மனைவி மற்றும் மனைவியினுடைய தாய் ஆகியோரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் வைத்திருந்த 55 பவுண் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டன.இந்தச் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டைப் பொலிஸாருடன் இணைந்து யாழ்ப்பாணம் குற்றத்தடவியல் பொலிஸ் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *