விபத்தில் சிக்கிய காயத்ரியின் தற்போதைய நிலை

Serial Actress Gayathriவிபத்தில் சிக்கிய சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை காயத்ரியின் தற்போதைய நிலை குறித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவரது கணவர்.

சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் காயத்ரி. சீரியலை தாண்டி இவர் நடன நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொள்ள இருந்தார்.

அப்படி நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் இவரது கை எலும்பு முறிந்தது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது கணவர் யுவராஜ் மனைவி காயத்ரியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு காயத்ரி நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *