பேஸ்புக் பொறுப்பில் இருந்து மார்க்கை நீக்க திட்டம்

பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க்கை சேர்மன் பதவியில் இருந்து நீக்க பங்குதாரர்கள் முன்மொழிவு அளித்துள்ளனர்.2004 ஆம் ஆண்டு பேஸ்புக் துவங்கப்பட்டது.

மார்க் சூகர்பெர்க் உள்ளிட்ட சிலரால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று உலக சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் உள்ளது.சமீப காலமாக பேஸ்புக் சர்ச்சையில் சிக்கி வருகிறது.

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு, பயனாளர் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா பகிர்ந்தது என அடுத்தடுத்து பிரச்னைகள் எழுந்தன.

இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார் மார்க்.இந்நிலையில், பேஸ்புக் சேர்மன் பொறுப்பில் இருந்து மார்க்கை நீக்க பங்குதாரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சில பிரச்னைகளை பேஸ்புக் கையாண்ட விதம் அதிருப்தியளிப்பதாக அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கின் சேர்மன் பதவி தன்னிச்சையான பதவியாக இருக்க வேண்டும் என்ற விதி இந்த முன்மொழிவில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் பேஸ்புக்கின் 60 சதவீத பங்குகள் மார்க் வசமே உள்ளது.

2019- மே மாதம் நடைபெறும் பேஸ்புக்கின் ஆண்டு பங்குதாரர்கள் கூட்டத்தில் இந்த முன்மொழிவு ஓட்டெடுப்புக்கு விடப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *